search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023 வரலாற்றை நிரூபிக்க மற்றொரு வாய்ப்பாக இருக்கும்- உதயநிதி ஸ்டாலின்
    X

    "கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023" வரலாற்றை நிரூபிக்க மற்றொரு வாய்ப்பாக இருக்கும்- உதயநிதி ஸ்டாலின்

    • "கேலோ இந்தியா" விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு.
    • தொடக்க விழாவில் பங்கேற்பதாக பிரதமர் மோடி உறுதி.

    பிரதமர் மோடியை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்தார்.

    "கேலோ இந்தியா" விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க சென்றிருந்தார்.

    அதன்படி, டெல்லியில் பிரதமர் இல்லத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பிதழை வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், " கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்" என்றார்.

    இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஜனவரி 19, 2024 அன்று சென்னையில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவிற்காக இன்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்ததில் மகிழ்ச்சி.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளின்படி, தமிழகத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விரிவான நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக வழங்குமாறு தமிழக அரசின் சார்பில் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.

    மேலும், தமிழகத்தின் பொது முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும், குறிப்பாக தமிழகத்தில் விளையாட்டுத்துறையின் பன்முக வளர்ச்சி குறித்து பிரதமருடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, 2023ம் ஆண்டுக்கான சிஎம் டிராபி விளையாட்டு மற்றும் தமிழ்நாடு நடத்திய ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பை வெற்றிகரமாக நடத்தியதைக் காட்டும் காபி டேபிள் புத்தகத்தையும் பிரதமரிடம் வழங்கினேன்.

    கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023, தமிழ்நாட்டின் பெறுமைமிக்க அமைப்புத் திறனையும், விளையாட்டுத் துறையில் புகழ்பெற்ற வரலாற்றையும் நிரூபிக்க மற்றொரு நம்பிக்கைக்குரிய வாய்ப்பாக இருக்கும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×