என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    X

    சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    • சென்னையில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
    • சேவைத்துறை தவிர பிற அரசு அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் இன்றும் வடதமிழகத்தில் கனமழை விடாமல் பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த 4 மாவட்டங்களுக்கு சேவைத்துறை தவிர பிற அரசு அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .

    Next Story
    ×