என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் பால்கனியில் இருந்து விழுந்த குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை
- குழந்தை மீட்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பால்கனியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய், கோவையில் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் இருந்து குழந்தை தவறி விழுந்தது.
குழந்தை மீட்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குழந்தையின் தாய் ரம்யா, கோவை காரமடையில் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






