search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடியில் நள்ளிரவில் வாலிபர் வெட்டிக்கொலை- கடைகள் அடைப்பு
    X

    தூத்துக்குடியில் நள்ளிரவில் வாலிபர் வெட்டிக்கொலை- கடைகள் அடைப்பு

    • முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
    • அப்பகுதியினர் கணேசன் கொலையை கண்டித்து சாலையின் நடுவே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அண்ணாநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ். இவர் மில்லர்புரம் மெயின் ரோட்டில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை விட்டு பிரிந்து மகளுடன் கே.டி.சி.நகரில் பெயிண்டர் சுடலைமணி என்பவருடன் வசித்து வருகிறார்.

    இதனால் ஆவுடையப்பன் தனது மகன் கணேசனுடன் (24) என்பவருடன் தனியாக வசித்து வந்தார். இது தொடர்பாக ஆவுடையப்பன் மற்றும் சுடலைமணி இடையே முன் விரோதம் இருந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு டி.எம்.பி. காலனியில் கணேசன் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த ஒருவர், கணேசனை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கணேசன் கீழே விழுந்ததும் அந்த நபர் தப்பி ஓடி விட்டார். தகவலறிந்த தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி. சத்தியராஜ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கணேசன் நள்ளிரவில் உயிரிழந்தார்.இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். இதற்கிடையே சுடலைமணி திடீரென தலைமறைவானார்.

    இதனால் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். மேலும் கணேசனை வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை அப்பகுதியினர் கணேசன் கொலையை கண்டித்து சாலையின் நடுவே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்தனர். மேலும் திறந்திருந்த கடைகளை அடக்க சொல்லி கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து அண்ணாநகர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×