என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தூத்துக்குடியில் காவலாளி வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை
    X

    கொலை செய்யப்பட்ட ஞானராஜ்


    தூத்துக்குடியில் காவலாளி வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை

    • லாரி செட் தண்ணீர் தொட்டி அருகே ஞானராஜ் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • போலீசார் விரைந்து சென்று ஞானராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்தவர் ஞானராஜ் (வயது55). இவர் தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் உள்ள ஒரு லாரி செட்டில் காவலாளியாக இருந்து வந்தார்.

    அந்த லாரி செட்டில் நேற்று இரவு 10-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இன்று அதிகாலை லாரி டிரைவர்கள் எழுந்து பார்த்த போது லாரி செட் தண்ணீர் தொட்டி அருகே ஞானராஜ் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தென்பாகம் போலீசில் புகார் செய்தனர்.

    சம்பவ இடத்துக்கு தூத்துக்குடி டி.எஸ்.பி. (பொறுப்பு) சம்பத், இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஞானராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஞானராஜ் எதற்காக கொலை செய்யப்பட்டார் ? அவரை கொலை செய்தவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×