என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அண்ணாமலை புகைப்படத்துடன் நடுரோட்டில் பலியிடப்பட்ட ஆடு - வீடியோ வெளியாகி பரபரப்பு
- சம்பவம் எங்கு? எப்போது? நடைபெற்றது என்பது தெரியவில்லை.
- பயங்கர செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ஜ.க. சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் கோவை தொகுதியில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். ஆனால் அவர் 4,50,132 வாக்குகளை பெற்று 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியை தழுவினார்.
இந்நிலையில், அண்ணாமலை புகைப்படத்துடன் ஆட்டை நடுரோட்டில் பலியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலை தேர்தலில் தோல்வியுற்ற நிலையில் அவரது புகைப்படத்தை ஆட்டின் கழுத்தில் கட்டி மர்மநபர்கள் பலியிட்டுள்ளனர். இச்சம்பவம் எங்கு? எப்போது? நடைபெற்றது என்பது தெரியவில்லை. அண்ணாமலைக்கு எதிராகவும் கோஷமிட்டுள்ளனர். இந்த பயங்கர செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ஜ.க. சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, அண்ணாமலை தோல்வியை தழுவினால் மொட்டை அடித்து மீசையை மழிப்பேன் என கூறிய பா.ஜ.க. நிர்வாகி சாலையில் அமர்ந்து மொட்டை அடித்து மீசையை மழித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.






