search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தியாகராயநகர் தொகுதிக்குள் பத்திரப்பதிவு அலுவலகம் அமைத்து தர வேண்டும்- கருணாநிதி எம்எல்ஏ வலியுறுத்தல்
    X

    தியாகராயநகர் தொகுதிக்குள் பத்திரப்பதிவு அலுவலகம் அமைத்து தர வேண்டும்- கருணாநிதி எம்எல்ஏ வலியுறுத்தல்

    • கோடம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட உரிய நிலத்தை தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது.
    • சார் பதிவாளர் அலுவலகம் இப்போது இடம் மாற்றப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று தியாகராயநகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி பேசுகையில், வடபழனி அழகிரிநகர் 5-வது தெருவில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டப்படுமா என்ற கேள்வி எழுப்பினார்.

    இதற்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பதிலளித்து கூறுகையில், "இந்த சார் பதிவாளர் அலுவலகம் 100 அடி சாலை தனியார் கட்டிடத்தில் தரை தளத்தில் இயங்கி வருகிறது.

    கோடம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட உரிய நிலத்தை தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது. நிலம் தேர்வு செய்யப்பட்டதும் சொந்த கட்டிடம் கட்ட பரிசீலிக்கப்படும்" என்றார்.

    ஜெ.கருணாநிதி: சார் பதிவாளர் அலுவலகம் இப்போது இடம் மாற்றப்பட்டுள்ளது. மீண்டும் அதே இடத்தில் கட்டிடம் கட்ட அரசு அனுமதிக்குமா?

    அமைச்சர் மூர்த்தி: கோடம்பாக்கத்தில் 8440 சதுர அடி இடம் தேர்வு செய்து கொடுத்தால் உடனே புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஜெ.கருணாநிதி : தியாகராயநகர் தொகுதிக்கு உட்பட்ட வடபழனி, மேற்கு மாம்பலம், அசோக்நகர் உள்ளடக்கிய சார் பதிவாளர் அலுவலகம் கே.கே.நகர் பகுதியில் இருந்து இப்போது அந்த பத்திரப்பதிவு அலுவலகம் முகப்பேருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தியாகராயநகர் தொகுதிக்கு உள்ளேயே சார் பதிவாளர் அலுவலகம் அமைத்து தர வேண்டும்.

    அமைச்சர் மூர்த்தி: இடம் இல்லாத பட்சத்தில் அங்கு இருக்கும் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு இடம் இருக்கும் பட்சத்தில் அதுபற்றி ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×