என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தகவல் தொழில்நுட்ப அணிக்கு மு.க.ஸ்டாலின் சொன்ன தகவல்
- தகவல் தொழில்நுட்பத்தை தமிழகத்தின் வளர்ச்சிக்கும், கட்சியின் வளர்ச்சிக்கும் சரியாக பயன்படுத்துங்கள்.
- எதையும் படிக்காமல் வாட்ஸ்அப்பில் வருவதையெல்லாம் படித்து விட்டு வாந்தி எடுப்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி திருத்த முடியாது.
சென்னை:
தி.மு.க.வுக்கு செப்டம்பர் மாதம் திராவிட மாதம்! நிறைவு நாளான நேற்று அதை கொண்டாடும் வகையில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் டுவிட்டர் ஸ்பேசில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அவர் பேசியதாவது:-
தகவல் தொழில்நுட்பத்தை தமிழகத்தின் வளர்ச்சிக்கும், கட்சியின் வளர்ச்சிக்கும் சரியாக பயன்படுத்துங்கள். எதையும் படிக்காமல் வாட்ஸ்அப்பில் வருவதையெல்லாம் படித்து விட்டு வாந்தி எடுப்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி திருத்த முடியாது.
நமது கொள்கையை, சாதனைகளை சொல்லுங்கள் மதவாத, சாதியவாத சக்திகள் அவதூறு பேசுவார்கள். கொச்சையாக பேசுவார்கள், கோபப்படுத்த பேசுவார்கள். அதையெல்லாம் புறந்தள்ளிவிடுங்கள். பொய் செய்திகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீர்கள்.
அதே நேரத்தில் ஒரு செய்தி வந்தால் அதன் உண்மை தன்மையை ஆய்வு செய்யும் அளவுக்கு பொய் செய்திகளை பரப்பி 'கேம்' ஆடலாம் என நினைப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து பாடம் புகட்டுங்கள் என்றார்.






