search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவ வேண்டும்- மத்திய மந்திரியிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்
    X

    6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவ வேண்டும்- மத்திய மந்திரியிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

    • தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய அரசு நர்சு கல்லூரிகள் நிறுவ வேண்டும்.
    • மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம்.

    உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் 'ஸ்வஸ்திய சிந்தன் ஷிவிர்' என்ற பெயரில் அனைத்து மாநில சுகாதாரத்துறை மந்திரிகள் பங்கேற்கும் 15-வது சுகாதார மாநாடு நடந்தது.

    இந்த மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அவருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோரும் சென்றிருந்தனர்.

    மாநாட்டின் போது, தமிழ்நாடு அரசின் 14 கோரிக்கைகளை, அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் வழங்கினார். அந்த கோரிக்கைகளின் விவரம் வருமாறு:-

    * மருத்துவக் கல்வி சேர்க்கை கொள்கை மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (நீட்) எதிர்ப்பு.

    * கோவையில் புதிய எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்.

    * தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவ வேண்டும்.

    * தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய அரசு நர்சு கல்லூரிகள் நிறுவ வேண்டும்.

    * மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகளுக்கு ஆட்சேபணை தெரிவிக்கிறோம்.

    * சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ பட்டதாரி படிப்புகளுக்கான உத்தேச பொது கலந்தாய்வுக்கும் ஆட்சேபனை தெரிவிக்கிறோம்.

    * தேசிய மருத்துவ ஆணையத்தின் (மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களை நிறுவுதல், மதிப்பீடு மற்றும் மருத்துவக் கல்விக்கான இடங்களில் அதிகரிப்பு 2023) வரைவுக்கு ஆட்சேபணை பொதுமக்களின் கருத்துக்காக சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    * காலியாக உள்ள அனைத்து இந்திய எம்.பி.பி.எஸ். இடங்கள் மாநிலத்துக்கு ஒப்படைக்கப்படும்.

    * 50 புதிய கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 50 புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை நிறுவ வேண்டும். மேலும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தவேண்டும்.

    * 1,000 புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள், 1,000 புதிய கிராமப்புற துணை சுகாதார நிலையங்களை நிறுவவேண்டும்.

    * சென்னை ராயப்பேட்டை அரசு பொது ஆஸ்பத்திரியில் கூடுதலாக 100 படுக்கைகள் கொண்ட முக்கிய மருத்துவ சேவைக் கட்டிடம் நிறுவ அனுமதிக்க வேண்டும்.

    Next Story
    ×