என் மலர்

  தமிழ்நாடு

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது?- மருத்துவமனை அறிக்கை
  X

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது?- மருத்துவமனை அறிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
  • அவர் மு.க.ஸ்டாலினிடம் உடல் நலம் விசாரித்தார்.

  சென்னை:

  தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அன்றைய தினம் காலையில் அவருக்கு லேசான உடல் சோர்வு ஏற்பட்டது.

  உடனடியாக அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

  இதனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந்தேதியில் இருந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு மாத்திரை சாப்பிட்டு வந்தார். அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

  இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு எந்த அளவு உள்ளது என்பதை கண்டறிய முடிவு செய்யப்பட்டது. இதற்காக நேற்று மதியம் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனைக்காக சென்றார்.

  பரிசோதனையில் அவரது நுரையீரலில் 10 சதவீதம் சளி பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

  இதனால் டாக்டர்கள் கண்காணிப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று எடுத்து சொல்லப்பட்டது. இதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்தது.

  இதில் அவரது உடல் நிலை ஓரளவு தேறி உள்ளது. இருந்தாலும் இன்னும் ஒரு நாள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றால் பூரணமாக குணம் அடைந்து விடலாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  இதனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டாக்டர்கள் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.

  மு.க.ஸ்டாலினை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து கவனித்துக்கொள்கிறார். மகன் உதயநிதி, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கின்றனர்.

  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல் நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், கொரோனா பாதிப்பில் இருந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருவதாகவும், இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார்.

  பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அவர் மு.க.ஸ்டாலினிடம் உடல் நலம் விசாரித்தார்.

  அப்போது பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி கூறினார். தான் நன்கு குணமடைந்து வருவதாக தெரிவித்தார்.

  மேலும் சென்னையில் வரும் ஜூலை 28-ந்தேதி தொடங்க உள்ள உலக செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டார். தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும், தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

  இந்த நிலையில் இன்று மதியம் காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் அரவிந்த் செல்வராஜ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்படும் சிகிச்சை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக தேவையான சிகிச்சை பெற நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை அனைத்தும் நடத்தப்பட்டன.

  கொரோனா தொற்றுக்குரிய அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் உரிய முறைப்படி வழங்கப்பட்டன. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குணம் அடைந்து வருகிறார். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்.

  அவர் மேலும் சில தினங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

  இவ்வாறு அந்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

  Next Story
  ×