search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 4 முனை போட்டி- சீமான் தனித்து போட்டி
    X

    தமிழகத்தில் 4 முனை போட்டி- சீமான் தனித்து போட்டி

    • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.
    • தேர்தல் களம் பரபரப்பாக மாறி இருக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி களம் காணும் நிலையில் அதனை எதிர்த்து அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிடுகின்றன.

    இப்படி 3 அணிகள் களம் காணும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 38 தொகுதிகளை தி.மு.க. கூட்டணியே கைப்பற்றியுள்ளது.

    அதே பலத்துடன் இந்த முறையும் தி.மு.க. கூட்டணி களம் இறங்குவதால் அது போன்ற ஒரு வெற்றியை மீண்டும் பெற வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்பட்டு உள்ளது.


    இந்த அணிக்கு எதிராக பாரதிய ஜனதா பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்துள்ளது. இந்த அணியும் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக தேர்தல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பாரதிய ஜனதா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் கடும் போட்டியை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

    பாரதிய ஜனதா இல்லாத புதிய கூட்டணியை அமைத்துள்ள அ.தி.மு.க.வும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளது.

    இப்படி தேர்தல் களத்தில் 3 அணிகளும் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காண்கிறது. 3 அணிகளுக்கும் நாங்கள் போட்டியை ஏற்படுத்தும் வகையில் களம் காண்போம் என்று நாம் தமிழர் கட்சியினரும் கூறி வருகிறார்கள். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக மாறி இருக்கிறது.

    Next Story
    ×