search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தயார் நிலையில் தீக்காய சிறப்பு வார்டு:  தீபாவளி முடியும் வரை செயல்படும் என்று அமைச்சர் அறிவிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தயார் நிலையில் தீக்காய சிறப்பு வார்டு: தீபாவளி முடியும் வரை செயல்படும் என்று அமைச்சர் அறிவிப்பு

    • பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும்.
    • கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகள் கொண்ட தீக்காய வார்டு இன்று முதல் 24 மணிநேரமும் இயங்கும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீக்காய சிறப்பு வார்டை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.

    பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும். எதிர்பாராத தீ விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்கப்பதற்காக கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகள் கொண்ட தீக்காய வார்டு இன்று முதல் 24 மணிநேரமும் இயங்கும்.

    சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளி பட்டாசு விபத்தில் தீக்காயம் பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 83 பேர். 2020-ல் மட்டும் ஒருவர் இறந்தார்.

    தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் ஆகிய 95 ஆஸ்பத்திரிகளில் தீபாவளிக்காக சிறப்பு தீக்காய வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. தேவையான மருந்துகள் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தீயணைப்புத் துறையினரின் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    Next Story
    ×