என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்திற்கு வரும் சர்வதேச விமான பயணிகளை கண்காணிக்க முடிவு
- கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் 12 மணியளவில் ஆலோசனை நடத்தினார்.
- கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
சீனா உள்ளிட்ட நாடுகளில் பிஎப்.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இந்த வைரசை கட்டுப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இததொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன்பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் 12 மணியளவில் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
அப்போது, தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.






