search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை டெல்லி செல்கிறார்
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை டெல்லி செல்கிறார்

    • உலகத் தலைவர்கள் வருகையையொட்டி டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
    • மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார்.

    சென்னை:

    டெல்லியில் ஜி-20 மாநாடு 9 மற்றும் 10-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்த பிரதமர் மோடி பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார். உலகத் தலைவர்கள் வருகையையொட்டி டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    'ஜி-20' மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்-அமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை இரவு( 9-ந்தேதி ) விருந்து அளிக்கிறார்.

    ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை (சனிக்கிழமை) டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 10.05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார். விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (10-ந் தேதி) மதியம் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைகிறார்.

    Next Story
    ×