என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜய்க்கு நன்றி தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு
    X

    விஜய்க்கு நன்றி தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு

    • ஆந்திர சட்டசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலுங்கு தேசக் கட்சிக்கும் வாழ்த்துகள்.
    • உங்கள் தொலைநோக்கு தலைமையின் கீழ் ஆந்திர மக்கள் சிறந்த முன்னேற்றத்தை அடைய வாழ்த்துகள் என தெரிவித்து இருந்தார்.

    ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் அறுதிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது தெலுங்கு தேசம் கட்சி. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக வருகிற 9-ந்தேதி பதவியேற்கிறார். இதையொட்டி தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில், "ஆந்திர சட்டசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலுங்கு தேசக் கட்சிக்கும் வாழ்த்துகள். உங்கள் தொலைநோக்கு தலைமையின் கீழ் ஆந்திர மக்கள் சிறந்த முன்னேற்றத்தை அடைய வாழ்த்துகள்" என தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த விஜய்க்கு சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்துள்ளார்.

    மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி @tvkvijayhq Garu என எக்ஸ் தள பக்கத்தில் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×