என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் உள்ளாட்சி பிரதிநிதிகள்-தொழில் துறையினருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு
- திருமுருகன்பூண்டி தனியார் ஓட்டலில் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்தார்.
- எல்.முருகன், மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்து கூறியதுடன், அதனை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.
அனுப்பர்பாளையம்:
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று திருப்பூர் மாநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கோவையில் இருந்து திருப்பூர் வந்த அவருக்கு அவிநாசியில் பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து திருமுருகன்பூண்டி தனியார் ஓட்டலில் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்தார். அப்போது எல்.முருகன், மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்து கூறியதுடன், அதனை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
பின்னர் திருப்பூரில் நடைபெற்று வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து பாளையக்காடு நல்லூர் மண்டலத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி அன்னதானம் மற்றும் மகளிருக்கு சேலை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவிநாசி ரோடு ஆர்.கே.ஓட்டலில் தொழில்துறையினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் பங்கேற்ற ஆடை உற்பத்தியாளர்கள், நூல், பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை மேற்கொண்டார். கூட்டம் முடிந்ததும் முருகம்பாளையம் சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து கோவை புறப்பட்டு சென்றார்.






