search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரபல நடிகரை கட்சிக்குள் இழுக்க பக்கா பிளான் போடும் பாஜக...
    X

    பிரபல நடிகரை கட்சிக்குள் இழுக்க பக்கா பிளான் போடும் பாஜக...

    • நடிகர்-நடிகைகள் விவகாரத்தில் சூப்பர் அந்தஸ்தில் தொடங்கி சுமாரானவர்கள் வரை யாராக இருந்தாலும் வளைத்துப் போடத்தான் கட்சிகள் விரும்பும்.
    • அசுர வளர்ச்சி பல்வேறு வழிகளிலும் கண்ணை உறுத்தத்தான் செய்யும்.

    சென்னை:

    அரசியல் கட்சிகள் திரை பிரபலங்களை பக்க பலத்துக்காக தங்கள் பக்கம் இழுத்து வைத்துக் கொள்வது காலம் காலமாக நடப்பதுதான்.

    நடிகர்-நடிகைகள் விவகாரத்தில் சூப்பர் அந்தஸ்தில் தொடங்கி சுமாரானவர்கள் வரை யாராக இருந்தாலும் வளைத்துப் போடத்தான் கட்சிகள் விரும்பும். அந்த வகையில் இப்போது நடிகர் சிவகார்த்திகேயனை நோக்கி அரசியல் வலை வீசப்பட்டு உள்ளது.

    தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு 'மெரீனா' படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானார். மெல்ல மெல்ல வளர்ந்து சினிமாவிலும் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறிக்கொண்டிருக்கிறார்.

    இவரது 'டாக்டர்', 'டான்', 'மாவீரன்' ஆகிய மூன்று படங்களும் ரூ.100 கோடி வசூலை தொட்டவை. இதனால் ஆரம்பத்தில் ஆயிரங்களையும், லட்சங்களையும் மட்டுமே தொட்ட சிவகார்த்திகேயனும் இப்போது சம்பளம் ரூ.40 கோடியை தொட்டு விட்டார்.

    இந்த அசுர வளர்ச்சி பல்வேறு வழிகளிலும் கண்ணை உறுத்தத்தான் செய்யும். இந்த மாதிரி நெருக்கடிகளால் நடிகர் விஜய் போன்றவர்களே தடுமாறும்போது சிவகார்த்திகேயனும் தடுமாறத்தான் செய்கிறார் என்பதில் ஆச்சரியமில்லை.

    ஏற்கனவே வலைதளங்களில் அவரை பற்றி பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இதற்கிடையில் 5 ஆண்டுகளுக்கு முன்பே மிகப்பெரிய பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட இவரது 'அயலான்' திரைப்படமும் பல்வேறு நெருக்கடிகளால் ரிலீஸ் ஆவது தொடர்ந்து தள்ளிப்போகிறது. இறுதியில் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ரஜினியின் 'லால்சலாம்', விக்ரமின் 'தங்கலான்', சுந்தர் சி.யின் 'அரண்மனை-4' ஆகியவையும் அயலானை தொடர்வதாக கூறப்படுகிறது. தனிப்பட்ட முறையிலும், சினிமாவிலும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் சிவகார்த்திகேயனை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதா 'பக்கா பிளான்' வகுத்து காய் நகர்த்தி வருகிறது.

    சிவகார்த்திகேயனை அணுகிய பா.ஜனதா முக்கிய நிர்வாகி ஒருவர் 'உங்களுக்கு எதிராக சினிமாவில் பெரும் கூட்டம் வேலை செய்வது உங்களுக்கே தெரியும். தனி மனிதராக நின்று எல்லாவற்றையும் எப்படி சமாளிப்பீர்கள். பா.ஜனதாவில் சேர்ந்தால் உங்களுக்கு பக்கபலமாக கட்சி இருக்கும். நீங்கள் ஓ.கே. சொன்னால் அமித்ஷா முன்னிலையில் சேருவதற்கு ஏற்பாடு செய்து விடுகிறோம்' என்று யதார்த்தங்களை சொல்லி அவரை கரைத்து இருக்கிறார்.

    ஆனால் இவ்வளவு சீக்கிரம் அரசியல் தேவையா? என்று தயங்கினாலும் 'அயலான்' ரிலீஸ் நேரத்தில் யாராவது பிரச்சனை செய்தால் உங்கள் உதவியை கேட்பேன் என்று கூறி இருக்கிறார்.

    அதை கேட்டு பா.ஜனதா தரப்பும் சந்தோசம் அடைந்துள்ளது. நெருக்கடிகள் தொடர்ந்தால் மனம் மாறுவார் என்று காத்திருக்கிறார்கள்.

    Next Story
    ×