என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவிட வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
    X

    சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவிட வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    • மழையால் மூலப்பொருட்கள், உற்பத்தி பொருட்களும் சேதமடைந்துள்ளது.
    • இந்நிறுவனங்களை உடனடியாக மீட்டெடுப்பது அவசியம்.

    மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கூடுதல் மூலதனக் கடன் மற்றும் கடன் திரும்ப செலுத்தும் காலத்தை நீட்டித்தல் உள்ளிட்ட முக்கிய உதவிகளை வழங்கிட வேண்டும் என மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் அந்த கடித்ததில், "சுமார் 4800 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மழையால் பாதிப்பு, மூலப்பொருட்கள், உற்பத்தி பொருட்களும் சேதமடைந்துள்ளது.

    இந்நிறுவனங்களை உடனடியாக மீட்டெடுப்பது அவசியம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×