search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்

    • சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்பட உள்ளது.
    • பிரத்யேக கார்டு வழங்கி, ரீசார்ஜ் செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரெயில் உள்ளிட்ட மூன்று வசதிகள் மக்களுக்கு உள்ளன. ஆனால் இது மூன்றிற்கும் மக்கள் தனித்தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள்.

    மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி மூன்றிலும் மக்கள் பயணிக்க முடியும்.

    அதன்படி, சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரிய நிலையில் அடுத்த மாதம் இந்த திட்டம் செயலுக்கு வர உள்ளது.

    இந்நிலையில் இத்திட்டம் ஜூன் 2வது வாரத்தில் அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் பொதுப்போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் வழங்கப்பட உள்ளது. பிரத்யேக கார்டு வழங்கி, ரீசார்ஜ் செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    Next Story
    ×