search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டமுடியும்? உயர் நீதிமன்றம் கேள்வி
    X

    ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டமுடியும்? உயர் நீதிமன்றம் கேள்வி

    • மீன்களை கழுவுவதற்கா சாலைகள்?, நடைபாதையை ஆக்கிரமித்து உணவகங்களை நடத்த அனுமதித்தது எப்படி?
    • லூப் சாலை மீன் வியாபாரிகளுக்காக 9.97 கோடி ரூபாய் செலவில் மீன் சந்தை கட்டப்படுவதாக மாநகராட்சி தகவல்

    சென்னை:

    சென்னையில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டப்போகிறீர்கள்? என சென்னை மாநகராட்சிக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    அத்துடன், மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 18ல் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தது.

    'மீன்களை கழுவுவதற்கா சாலைகள்?, நடைபாதையை ஆக்கிரமித்து உணவகங்களை நடத்த அனுமதித்தது எப்படி? சாலை ஆக்கிரமிப்பை சகிக்கவும் முடியாது, சமரசமும் செய்யவும் முடியாது. சாலையில் ஆக்கிரமிப்புக்குத்தான் அனுமதிக்கப்படுகிறது. போக்குவரதுக்கு அனுமதிகக்ப்படுவதில்லை' என்றும் உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

    லூப் சாலை மீன் வியாபாரிகளுக்காக 9.97 கோடி ரூபாய் செலவில் மீன் சந்தை கட்டப்படுகிறது என்றும், அவர்களின் வாழ்வாதாரம் கருதி போக்குவரத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாலையின் மேற்கு பகுதியில் உள்ள உணவகங்களின் உரிமங்கள் ஆய்வு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×