என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மழை பாதிப்பு: கூடுதல் அமைச்சர்கள் நியமனம்
- 4 மாவட்ட மீட்புப் பணிகளுக்காக கண்காணிப்பு அதிகாரிகளாக நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
- மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த இன்று கூடுதலாக 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
தென்மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
4 மாவட்ட மீட்புப் பணிகளுக்காக கண்காணிப்பு அதிகாரிகளாக நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
கன்னியாகுமரி-நாகராஜன், நெல்லை-செல்வராஜ், தூத்துக்குடி-ஜோதி நிர்மலா, தென்காசி-சுன்சோங்கம் ஜதக் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
களத்தில் ஏற்கனவே அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளனர்.
இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த இன்று கூடுதலாக 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், ராஜ கண்ணப்பன், மூர்த்தி ஆகியோரை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Next Story






