என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிரதமர் வருகை எதிரொலி: வீட்டு சிறையில் காங்கிரஸ் நிர்வாகி
    X

    பிரதமர் வருகை எதிரொலி: வீட்டு சிறையில் காங்கிரஸ் நிர்வாகி

    • பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் உள்ள ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    • முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    3 நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி சென்னை, பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில், கேலோ இந்தியா யூத் கேம்ஸ்-2023 விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் உள்ள ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை தாம்பரம் முதல் கடற்கரை வரை உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து, சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர். முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்டப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து இருந்தது.

    இதையடுத்து கட்சியின் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×