search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்... ரெயில்களில் கடும் நெரிசல்
    X

    தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்... ரெயில்களில் கடும் நெரிசல்

    • தீபாவளியை கொண்டாட மக்கள் இன்றிலிருந்தே சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
    • பண்டிகை காலத்தை முன்னிட்டு தாம்பரம், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வந்தவண்ணம் உள்ளனர். இதனால் பேருந்து மற்றும் ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    தீபாவளிக்கு முந்தைய சனி, ஞாயிறு (22, 23-ந்தேதி) விடுமுறை நாட்களாகும். திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. எனவே, சென்னையில் தங்கியிருந்து வேலை செய்யும் மக்கள் இன்றிலிருந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.


    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் ஏராளமானோர் எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு வருகின்றனர். பேருந்துகளில் இடம் கிடைக்காதர்வர்களின் தேர்வு ரெயில்தான். இதனால், எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட மிக அதிகமாகவே உள்ளது. பலர் நின்றுகொண்டே பயணிப்பதை பார்க்க முடிகிறது.

    பண்டிகை காலத்தை முன்னிட்டு தாம்பரம், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், எழும்பூரில் வழக்கமாக இயக்கப்படும் ரெயில்களுடன் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளன. பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், ரெயில் நிலையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் சாதாரண உடையில் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×