search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் 3ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்தில் 3ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு

    • காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில், தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற கூடும்
    • தமிழகம், புதுச்சேரியில் வரும் 3ந்தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.

    வரும் 29ந்தேதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில், தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற கூடும்.

    இதனால் தமிழகம், புதுச்சேரியில் வரும் 3ந்தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை நகரில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    புயலாக வலுபெற்றதும் அதற்கு மியான்மர் பரிந்துரைத்த "மிக்ஜாம்" என பெயர் சூட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×