search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மகளிர் உரிமைத் திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளது: முதலமைச்சர் பெருமிதம்
    X

    மகளிர் உரிமைத் திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளது: முதலமைச்சர் பெருமிதம்

    • கலைவாணர் அரங்கில் மகளிர் உரிமைத்தொகையினை இரண்டாவது கட்டமாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    மகளிர் உரிமைத்தொகையினை இரண்டாவது கட்டமாக வழங்கும் திட்டத்தை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    என் குரலை கேட்கிற போதே உங்களுக்கு நன்றாக தெரியும். அதனால்தான் சில நாட்கள் வீட்டிலேயே முழு ஓய்வு எடுத்துக் கொண்டேன்.

    இந்த வாரம் முழுவதும் ஓய்வெடுக்க வேண்டும் என்று என்னுடைய மருத்துவர்கள் சொன்னாலும், என்னால் மக்களைச் சந்திக்காமல் இருக்க முடியாது.

    அதனால்தான் தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டத்தில் இருந்தும், காணொலி காட்சி மூலமாக இணைந்திருக்கிற உங்களைப் பார்க்க வந்துவிட்டேன்.

    தொண்டை வலி இருந்தாலும் தொண்டு செய்வதில் தொய்விருக்கக் கூடாது என்பதால் வந்துள்ளேன்.

    உங்களைப் பார்க்கும்போது என்னுடைய உடல்வலி குறைந்து மனது மகிழ்ச்சியில் நிறைந்துள்ளது. இந்த 1000 ரூபாய் நீங்கள் வாங்கும் போது உங்களுக்கு ஏற்படுகிற மகிழ்ச்சியைவிட கொடுக்கும்போது எனக்குத்தான் அதிக மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சியை விட சிறந்த மருந்து எதுவாக இருக்கமுடியும். அதனால்தான் மருத்துவர்கள் அறிவுரையை மீறி இந்த விழாவுக்கு வந்துள்ளேன்

    மகளிர் உரிமைத்தொகை நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என சிலர் விமர்சித்தனர். சொன்னதைச் செய்வோம்- அதன் அடையாளமே மகளிர் உரிமைத்திட்டம்.

    சொன்னதைச் செய்ததால் உங்கள் முன் தைரியமாக நிற்கிறேன். மகளிர் உரிமைத் திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரியாக உள்ளது என தெரிவித்தார்.

    Next Story
    ×