என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு சுடச்சுட பிரியாணி பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட முதல்வர்
- வெள்ள பாதிப்பில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
- சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக அரசு நிர்வாகத்தை முடுக்கிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகரின் பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தினார்.
நேற்று முன்தினம் யானைக்கவுனி, புளியந்தோப்பு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கிண்டி ரேஸ் கிளப் பகுதி, வேளச்சேரி ஆறுகண் கல்வெட்டு வீராங்கால் ஓடை மற்றும் நாராயணபுரம் ஏரி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று சென்னை கொளத்தூர் தொகுதிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஜம்புலிங்க மெயின்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்று தூய்மை பணியாளர்கள் மற்றும் முன் 'கள' பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
சென்னை வெள்ள பாதிப்பில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து கொளத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு சுடச்சுட பிரியாணி பரிமாறிய முதலமைச்சர் அவர்களுடன் அமர்ந்து பிரியாணி உண்டார்.






