தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியீடு

விஜயகாந்துக்கு இன்று 6-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.2 அல்லது 3 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு விஜயகாந்த் வீடு திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியீடு
Published on

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு கடந்த 18-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையே மூச்சு விடுவதில் அவருக்கு லேசான சிரமம் ஏற்பட்டது. இதற்காகவும் விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 அல்லது 3 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு விஜயகாந்த் வீடு திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று 6-வது நாளாக விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மியாட் மருத்துவமனை விஜயகாந்தின் உடல் நிலை தொடர்பாக மருத்துவ அறிக்கையை வெளியிட்டது.

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

விஜயகாந்த் அவர்கள் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் 18 நவம்பர் 2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல் நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com