search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒரு மாதத்துக்கு பிறகு தக்காளி வரத்து 40 லாரிகளாக அதிகரித்தது
    X

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒரு மாதத்துக்கு பிறகு தக்காளி வரத்து 40 லாரிகளாக அதிகரித்தது

    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 60 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும்.
    • வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    போரூர்:

    தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை உச்சத்தில் இருந்தது. கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை சரிந்து வருகிறது.

    வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 60 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும். விலை உச்சத்தில் இருந்தபோது 20 முதல் 30 லாரிகள் என்ற அளவிலேயே தக்காளி வரத்து இருந்தன.

    இப்போது தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் கடந்த 2 நாட்களாக மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்பட்டது.

    மேலும் தக்காளி வரத்தும் கடந்த சில நாட்களாக சராசரியாக 35 லாரிகளாக வரத் தொடங்கியது.

    இதற்கிடையே இன்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு 40 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தன. விலை அதிகரிப்புக்கு பிறகு கடந்த ஒரு மாதத்துக்கு பின்னர் தக்காளி வரத்து 40 லாரியாக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் தக்காளி விலை மேலும் குறைந்து மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோ ரூ.200 வரை சென்று உச்சம் தொட்ட தக்காளியின் விலை குறைந்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன் விலை மேலும் படிப்படியாக குறைந்து வீழ்ச்சி அடையும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×