என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? ஆலோசித்து முடிவை அறிவிப்போம்- கமல்ஹாசன்
- ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.
- மக்களுக்கு எது நன்மை பயக்கும் என்பதை பற்றி கூட்டத்தில் ஆலோசிப்போம்.
சென்னை:
கமல்ஹாசன் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஈரோடு கிழக்கு தொகுதி உள்பட ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கலாமா என்பது தொடர்பாக நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடனான சந்திப்புக்கு பின்னர் கமல்ஹாசன் கூறியதாவது:
* செயற்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்த பின் முடிவை அறிவிப்போம்.
* மக்களுக்கு எது நன்மை பயக்கும் என்பதை பற்றி கூட்டத்தில் ஆலோசிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






