search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓ.பி.எஸ். மேல்முறையீடு மனு புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும்: நீதிபதிகள் அறிவிப்பு
    X

    ஓ.பி.எஸ். மேல்முறையீடு மனு புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும்: நீதிபதிகள் அறிவிப்பு

    • அவசர விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற நிலையில், இன்று பட்டியலிடப்படவில்லை.
    • முறையீடு அன்று மனு தாக்கல் செய்யவில்லை. பிறகு எப்படி விசாரணைக்கு எடுக்க முடியும்?- நீதிபதிகள்

    அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு வழங்கியது. கடந்த 7-ந்தேதி தனிநீதிபதி என். சதீஷ்குமார் இந்த தடைக்கால உத்தரவை பிறப்பித்தார்.

    இதனை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. அதில் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்கவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு உயர்நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. அத்துடன் வருகிற வெள்ளிக்கிழமை (இன்று) ஆர். மகாதேவன், முகமது ஷெரீஃப் ஆகிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று மேல்முறையீடு மனு மீது விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று பட்டியலிடப்படவில்லை. இதனால் வருகிற புதன்கிழமை (15-ந்தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

    மனுதாக்கல் நடைமுறைகள் முடிந்த நிலையிலும் விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் இன்று விசாரிக்க ஓ.பி.எஸ். தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், முறையீடு அன்று மனு தாக்கல் செய்யவில்லை. பிறகு எப்படி விசாரணைக்கு எடுக்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என அறிவித்தனர்.

    Next Story
    ×