என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாமல்லபுரம் கடற்கரையில் பயங்கரம்: குதிரை ஓட்டும் வாலிபர் வெட்டிக் கொலை
    X

    மாமல்லபுரம் கடற்கரையில் பயங்கரம்: குதிரை ஓட்டும் வாலிபர் வெட்டிக் கொலை

    • அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும் உடும்பனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது
    • அனைவரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    தஞ்சாவூரை சேர்ந்தவர் ரூபன் என்கின்ற உடும்பன் (வயது23). இவர், கடந்த 5ஆண்டுகளாக மாமல்லபுரம் ஒத்தவாடை தெரு பகுதியை சேர்ந்த ஒருவரிடம் குதிரை ஓட்டும் தொழில் செய்து வந்தார். அவர் மாமல்லபுரம் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளை குதிரையில் அழைத்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் இன்று காலை மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே உள்ள கடற்கரையில் உடும்பன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும் உடும்பனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக கொலை நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்கள் அனை வரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன்பின்னரே கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும்.

    மாமல்லபுரம் கடற்கரையில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×