search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு-வாட்டி வதைக்கும் குளிர் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது
    X

    ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு-வாட்டி வதைக்கும் குளிர் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது

    • குறிப்பாக மாலை 3 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 11 மணி வரை நீடிக்கிறது.
    • ஏற்காட்டில் உள்ள மரங்கள், காபி, தேயிலை செடிகளிலும் பனி படர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடுக்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக கோடை காலமான ஏப்ரல் , மே மாதங்களில் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்த காலங்களில் கோடை விழாவும் அரசு சார்பில் நடத்தப்படும். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொள்வார்கள்.

    இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை காலமான கடந்த சில மாதங்களாக ஏற்காட்டில் கனமழை பெய்தது. இந்த மழையால் ஏற்காடு மலை பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மேலும் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள அருவிகளில் அதிக அளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதில் சு ற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதை தொடர்ந்து ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. குறிப்பாக மாலை 3 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு காலை 11 மணி வரை நீடிக்கிறது. இதனால் ஏற்காட்டில் உள்ள மரங்கள், காபி, தேயிலை செடிகளிலும் பனி படர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது.

    மேலும் ஏற்காட்டில் தொடரும் பனியால் அருகில் நிற்பவர்களை கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடரும் பனிப்பொழிவால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு ஊர்ந்த படியே செல்கின்றன. ஏற்காட்டில் கடும் குளிர் நிலவுவதால் ஏற்காட்டில் வசிக்கும் காபி மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் வெளியில் செல்பவர்கள் குளிர் தாங்க முடியாமல் ஸ்வெட்டர், ஜர்கின் அணிந்த படி செல்கிறார்கள். பகல் முழுவதும் இதே நிலை நீடிப்பதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    Next Story
    ×