search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லையில் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு- புதிதாக பாலம் கட்ட கோரிக்கை
    X

    குளம் உடைந்த மூவிருந்தாளி கிராம பகுதிகளில் நெல்லை ஆர்.டி.ஓ. ஷேக் அய்யூப் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    நெல்லையில் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு- புதிதாக பாலம் கட்ட கோரிக்கை

    • தேவர்குளத்தை அடுத்த மேல இலந்தைகுளம் பகுதியில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கின.
    • வெள்ளத்தின் நடுவே டிராக்டர் மூலமாக பொதுமக்கள் கரையின் இருபுறத்திற்கும் சென்று வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களின் எல்லை பகுதிகளாக அமைந்துள்ள மூவிருந்தாளி, சுண்டங்குறிச்சி, பன்னீர் ஊத்து மற்றும் தென்காசி- நெல்லை மாவட்ட எல்லை பகுதியான தேவர்குளம் பகுதியில் அமைந்துள்ள மேல இலந்தை குளம் மற்றும் அதன் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக ஏராளமான குளங்கள் நிரம்பின.

    தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் ஒரு பகுதியாக தேவர்குளத்தை அடுத்த மேல இலந்தைகுளம் பகுதியில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கின.

    சங்கரன்கோவில், நெல்லை நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த தரை பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால் போக்குவரத்து பாதிக்க ப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தை நெல்லை ஆர்.டி.ஓ. ஷேக் அய்யூப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தற்போது இந்த வெள்ளத்தின் நடுவே டிராக்டர் மூலமாக பொதுமக்கள் கரையின் இருபுறத்திற்கும் சென்று வருகின்றனர். லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மட்டுமே தற்போது இந்த வழியாக செல்ல முடிகிறது.

    இந்த பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கும் நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணி முதல் கடுமையான வெள்ளப்பெருக்கு இருந்து வருவதாகவும், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தரைப்பாலம் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிதாக பாலம் கட்டுவதற்காக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.

    Next Story
    ×