என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

தேசிய நல்லாசிரியர் விருது தேர்வான தமிழக ஆசிரியர்கள்- கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து

- தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- தமிழக கவர்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழக கவர்னர் ஆர் என் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில் கூறியிருப்பதாவது:-
Hearty congratulations to Tmt. S. Malathi, Govt. HS School, #Veerakeralampudur, and Dr. T Godwin Vedanayagam Rajkumar, Govt. Boys HS School, #Alanganallur, for winning the National Award for Teachers-2023 for your extraordinary efforts and contributions to the field of education.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) August 27, 2023
"கல்வி துறையில் உங்களின் தலைசிறந்த முயற்சிகள் மற்றும் அர்பணிப்புக்காக, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியை மாலதி, ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்று தெரிவித்துள்ளார்.