என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை உள்பட 26 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னை உள்பட 26 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்

    • தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

    இதற்கிடையில் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    கோடை வெயிலின் வெப்பத்தால் அவதிபட்டு வந்த மக்களுக்கு 2 நாட்கள் பெய்த மழை இதமாக இருந்தது. 3 மாதங்கள் சுட்டெரித்த வெயில் பாதிப்பில் இருந்து மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 26 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து உள்ளது. ஒரு சில நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

    அதன்படி இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று காலையில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரையொட்டிய மாவட்டங்களில் மழை தூறல் இருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மழை சிறுசிறு தூறலாக பெய்தது. இதேபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டிலும் இன்று காணப்பட்டது.

    Next Story
    ×