என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தற்காலிகமாக நிறுத்தம்
- ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
- காளை ஓடிக்கொண்டிருக்கும் போது திடீர் என்று காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 7 சற்று நடைப்பெற்று கொண்டிருக்கும் போது 556 காளைகள் அவிழ்த்த பின்பு ஒரு காளைக்கு காலில் அடிப்பட்ட காரணத்தால் 10 நிமிடம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஏனென்றால் ஜல்லிக்கட்டு களத்திலிருந்து அந்த காளையை மருத்துவ சிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஏற்ற வேண்டும். அந்த நேரத்தில் வேறு காளைகளை அவிழ்த்து விட்டுவிட்டால், அந்த காளையை ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கு வசதியாக இருக்காது ஆகவே ஜல்லிக்கட்டு போட்டியானது 10 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த காளை ஓடிக்கொண்டிருக்கும் போது திடீர் என்று காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தயார் நிலையில் உள்ள கால்நடை மருத்துவக்குழு காளைக்கு உடனடியாக அருகில் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்க உள்ளனர். தேவைப்பாட்டால் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள கால்நாடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.






