search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    66 சதவீதமாக அதிகரிப்பு: மது விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் விஸ்கி
    X

    66 சதவீதமாக அதிகரிப்பு: மது விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் 'விஸ்கி'

    • மதுபான விற்பனையில் உலகின் 5-வது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.
    • ரெடி-டு ட்ரிங்க் பானங்கள் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக உருவெடுத்துள்ளன.

    சென்னை:

    இந்தியாவில் சமீபகாலமாக மதுப்பிரியர்கள் அதிகரித்து வருகின்றனர். எதற்கெடுத்தாலும் பார்ட்டி என்ற நிலை வந்துவிட்டதால் மது விற்பனையும் அதிகமாகி வருகிறது. மதுபான விற்பனையில் உலகின் 5-வது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.

    மதுபான வகைகளை ஒயின், ஜின் விற்பனை அதிகரித்த நிலையில் தற்போது விற்பனையில் விஸ்கி முதலிடத்துக்கு வந்துள்ளது. இந்தியாவின் மது விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு விஸ்கி விற்பனை ஆவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் 85 சதவீதம் 10 உள்நாட்டு பிராண்டுகள் பிடித்துள்ளன. விஸ்கியின் விற்பனை சதவீத 66 ஆக அதிகரித்து உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கி 3.3 சதவீதம் விற்பனை ஆவதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விஸ்கி சந்தையில் 96 சதவீத இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்புகளுக்கு பின்னர் மது வணிகம் மீண்டும் முன்னேற்ற பாதையில் உள்ளது. வோட்கா ரகம் விற்பனையில் 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இந்தியாவை பொருத்தவரை ரூ.53 பில்லியன் மதுபானங்கள் விற்பனை ஆவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் இதன் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெடி-டு ட்ரிங்க் பானங்கள் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக உருவெடுத்துள்ளன. கடந்த ஆண்டு 40 சதவீதம் இது விற்பனை ஆகி உள்ளது.

    மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் கூட இதன் எண்ணிக்கை விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தையில் ஐந்தில் ஒரு பங்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒயின்களே விற்பனை ஆகின்றன. இதில் ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட ஒயின்களே அதிகம். தடையற்ற வர்த்தகம் காரணமாக இவை அதிகமாக இறக்குமதி ஆவதால் விற்பனையும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கிகளும் விற்ப னையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. அமெரிக்க, ஜப்பானிய, கன்னட விஸ்கிகள் இருந்தா லும் இந்திய தயாரிப்பை மதுப்பிரியர்கள் விரும்புவதாக இந்திய மதுபான விற்பனை சங்கத்தின் தலைமை அதிகாரி நிதா கபூர் தெரிவித்தார்.

    Next Story
    ×