என் மலர்

  தமிழ்நாடு

  தமிழக அரசு
  X
  தமிழக அரசு

  மானிய விலையில் சூரிய சக்தி பம்பு செட்டு திட்டம்: விவசாயிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த திட்டத்தில் சேர ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து சில மோசடி இணையதளங்கள் மூலம் பணம் மற்றும் தகவல்களை பெறப்படுவதாக தெரிய வந்துள்ளது.
  சென்னை:

  தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

  மாநிலமுதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், 40 சதவீத நிதி உதவி மற்றும் மத்திய அரசின் பிரதம மந்திரி விவசாயிகள் ஆற்றல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 30 சதவீத நிதி உதவி என மொத்தம் 70 சதவீத மானியத்தில், விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் 10 குதிரைத்திறன் வரையிலான பம்பு செட்டுகள் அமைத்து தரப்படுகிறது.

  இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு போர்ட்டல் வலைதளங்கள் என்று பொய்யான சில மோசடி இணையதளங்கள் மூலம் பணம் மற்றும் தகவல்களை பெறப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பொது அறிவிப்பு எரிசக்தி அமைச்சகம் மூலம் கடந்த காலங்களில், வெளியிடப்பட்டுள்ளது. 

  இந்த திட்டத்துக்கு என எந்தவொரு பதிவுக் கட்டணத்தையும் டெபாசிட் செய்ய வேண்டாம் என்றும்,  பொய்யான வலைதளங்களில் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் பகிரவோ வேண்டாம் என்றும் பொது மக்களுக்கு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  எனவே, சந்தேகத்திற்குரிய இணைய தளத்திற்கான லிங்கினை கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

  மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் இணையதளம் www.mnre.gov.in மற்றும் மாநில அரசின் இணையதளம் https://pmkusum.tn.gov.in, https://mis.aed.tn.gov.in, https://www.aed.tn.gov.in ஆகியவற்றின் மூலம் மட்டுமே பதிவு மற்றும் திட்டம் பற்றிய தகவல்களுக்கு அணுக வேண்டும்.

  இ்வவாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Next Story
  ×