search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாய் சிதைந்த பசுமாடு
    X
    வாய் சிதைந்த பசுமாடு

    மீண்டும் ஒரு சம்பவம்- நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டின் வாய் சிதைந்தது

    வனப்பகுதியையொட்டிய நிலத்தில் மான், காட்டு பன்றிகளை வேட்டையாடும் கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து வைக்கின்றனர். இதில் சிக்கி ஆடு, மாடுகள் பலியாவது தொடர் கதையாகி வருகிறது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த பசுவபாளையத்தைச் சேர்ந்தவர் மல்லிராஜ் (43). இவர் பசு மாடுகள், ஆடுகளை வளர்த்து வந்தார். இவரது பசு மாடுகள் அதே பகுதியில் உள்ள காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாடுகள் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்று இருந்தது. அப்போது திடீரென வெடிச்சத்தம் கேட்டது.

    இதையடுத்து மல்லிராஜ் என்ன ஏதோ என்று பதறி கொண்டு காட்டு பகுதிக்கு சென்றார். அப்போது தனது பசுமாட்டின் வாய் சிதைந்து ரத்தம் கொட்டி நின்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து பவானி சாகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் காட்டுப் பன்றிகளை வேட்டையாட மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டை மாடு கடித்ததில் வெடித்து மாட்டின் வாய் சிதைந்தது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாட்டை அழைத்து சென்றனர்.

    வனப்பகுதியையொட்டிய நிலத்தில் மான், காட்டு பன்றிகளை வேட்டையாடும் கும்பல் நாட்டு வெடிகுண்டுகளையும் மறைத்து வைக்கின்றனர். இதில் சிக்கி ஆடு, மாடுகள் பலியாவது தொடர் கதையாகி வருகிறது. எனவே வேட்டை கும்பல் மீது போலீசார் மற்றும் வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கடந்த சில நாட்கள் முன்பு டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயியின் மாடு அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றபோது நாட்டு வெடிகுண்டை கடித்து அந்த மாட்டின் வாய் சிதைந்து சுமார் 5 நாட்களுக்கு பிறகு அந்த மாடு இறந்தது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×