search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    ராணிப்பேட்டை, வேலூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரசாரம்

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள ஊசூர் மற்றும் தார்வழி கூட்ரோடு ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்கிறார்.
    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து ஆதரித்தும் அந்த கட்சியின் தலைவர் சீமான் பிரசாரம் செய்கிறார்.

    இன்று காலை ராணிப்பேட்டை முத்துக்கடை மாந்தாங்கல் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

    தொடர்ந்து மாலை 4 மணிக்கு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள ஊசூர் மற்றும் தார்வழி கூட்ரோடு ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்கிறார்.

    4.30 மணிக்கு அணைக்கட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இன்று இரவு வேலூரில் தங்குகிறார். நாளை திருப்பத்தூர் மாவட்டத்தில் சீமான் பிரசாரம் செய்கிறார்.

    Next Story
    ×