search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    மதுராந்தகம் ஏரியை புதுப்பிக்க ரூ.120 கோடிக்கு ஒப்புதல்- தமிழக அரசு உத்தரவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மதுராந்தகம் ஏரியை புதுப்பிக்க ரூ.120 கோடி தொகைக்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக பொதுப்பணித்துறையின் முதன்மைச்செயலாளர் கே.மணிவாசன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், மாதவரம் ஏரி, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி மற்றும் மதுராந்தகம் ஏரி ஆகியவற்றின் உள்கட்டமைப்புகள் அனைத்தையும் புதுப்பிக்கும் பணிகள் ரூ.302.90 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அந்த அறிவிப்பின் அடிப்படையில் அரசுக்கு தலைமை பொறியாளர் கடிதம் அனுப்பினார். அதில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தவும், கரைகளை பலப்படுத்தவும், தூர் வாரவும் ரூ.125 கோடி செலவாகும் என்ற முன்மொழிவை அனுப்பியுள்ளார்.

    அதில், ஆயிரத்து 58 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இந்த ஏரியின் மூலம் 2 ஆயிரத்து 852 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பாலாறின் கிளையாறு பாய்வதால் மதுராந்தகம் ஏரியில் மணல் சேர்ந்துவிடுகிறது.

    2015-ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி கரைகள் உடைந்துவிட்டன. அதனால் ஏரிகளின் அசல் கொள்ளளவு குறைந்துவிட்டது. மதுராந்தகம் ஏரியின் அசல் கொள்ளளவு 694 மில்லியன் கனஅடியில் இருந்து 530 மில்லியன் கனஅடியாக குறைந்துவிட்டது.

    எனவே அதை பழைய நிலைக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக ஆகும் செலவான ரூ.125 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

    இதையடுத்து, ரூ.120.24 கோடி கடன் கேட்டு நபார்டு வங்கிக்கு அரசு முன்மொழிவை அனுப்பிவைத்தது. நபார்டு வங்கியிடம் இருந்து கடன்பெற அனுமதி அளிக்கவும் அரசு முடிவு செய்து அதற்கான ஆணையை பிறப்பித்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×