என் மலர்

  செய்திகள்

  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  X
  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

  ஸ்டாலின் மனு வாங்குவது ஏமாற்று வேலை- எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  100 நாளில் குறை தீர்ப்பேன் என்று ஸ்டாலின் மனு வாங்குவது ஏமாற்று வேலை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
  திருப்பூர்:

  திருப்பூர் பாண்டியன் நகரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் பேசியதாவது:-

  தி.மு.க.வினர் திட்டமிட்டே தமிழக அரசின் மீது வீண் பழி சுமத்தி வருகின்றனர்.c திமுக ஆட்சியில் என்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஸ்டாலின் ஊர் ஊராய் போய் பெட்சீட்டை போட்டு உட்கார்ந்து வருகிறார்.

  தி.மு.க. ஆட்சியில் எங்காவது சென்று குறைகளை கேட்டிருக்கிறாரா? நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டாரே என்ன செய்தார் ?

  மனுவை பெட்டிக்குள் வாங்கி போட்டு 100 நாட்களில் அதை தீர்ப்பாராம்? எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை.

  உள்ளாட்சித்துறை அமைச்சராக ஆட்சியில் இருந்தபோது ஏன் தீர்க்கவில்லை. ஸ்டாலின் மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறாராம். 100 நாட்களில் குறைகளை நிவர்த்தி பண்ணுவதாக கூறுகிறார். ஆட்சியில் இருந்தபோது இதையெல்லாம் செய்யாமல் தற்போது ஏமாற்றி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலின்போதும் தி.மு.க. சார்பில் மனு வாங்கப்பட்டது. அதன் நிலை என்ன என்பதே தெரியவில்லை.

  குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றாலே குறைந்தது 1 வருடம் ஆகும். திட்டமிட்டு ஒவ்வொன்றையும் நிறைவேற்ற வேண்டும். ஆனால் ஸ்டாலின் 100 நாட்களில் நிறைவேற்றுவேன் என்கிறார். நவீன காலத்தில் பெட்டியில் மனு வாங்க வருகிறார். தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை, பெட்டியை உடைக்க போவதும் இல்லை.

  அரசாங்கத்தின் மூலம் நிறைவேற்றபட வேண்டிய பிரச்சினைகள் இருந்தால் செல்போன் மூலமே சொல்லலாம். 10 நாட்களில் 1100 என்று எண்ணுக்கு அழைத்து குறைகளை சொல்லும் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. நவீன காலத்தில் சுலபமாக குறைகளை கேட்டறியும் திட்டத்தை அ.தி.மு.க. துவங்க உள்ளது.

  38 நாடாளுமன்ற உறுப்பினர்களை தி.மு.க. வைத்திருந்தும் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை எதுவும் வலியுறுத்தவில்லை. அ.தி.மு.க.வில் 1 நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே இருந்தாலும், தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் வலியுறுத்தி பெற்றுவருகிறோம். சாலைகள் மேம்பாட்டிற்காக மத்திய அரசிடம் அதிக நிதியை பெற்றுள்ளோம்.

  தி.மு.க. ஆட்சியில் மின் வெட்டு இருந்தது. அதனை மாற்றி தற்போது மின் மிகை மாநிலமாக மாற்றியுள்ளோம். அதன் விளைவாக உலக தொழிலதிபர்கள் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகத்தை தேடி வருகின்றனர்.

  இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க செயல்திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதனையும் நம் ஆட்சியில் துவங்கி வைக்கப்படும். 3 மாதத்தில் முதல்-மந்திரியாக ஆக வருவேன் என ஸ்டாலில் சொல்கிறார். எப்படி வரமுடியும் . மக்கள் வாக்களித்தால் மட்டுமே முடியும் .

  கொரோனா தொற்று காலத்தில் இலவச அரிசி பருப்பு மற்றும் நிவாரணமாக ரூ. 1000 கொடுத்தோம். தைப்பொங்கலுக்கு ரூ. 2500 கொடுத்துள்ளோம். உங்கள் ஆட்சி காலத்தில் 100 ருபாய் கொடுத்ததுண்டா?

  திருப்பூரில் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி கட்டுமானப்பணி விரைவில் துவங்கப்படும்.

  திருப்பூர் வடக்கு தொகுதில் 4 ஆண்டுகளில் ரூ. 200 கோடிக்கும் மேல் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டாலினுக்கு நாட்டில் என்ன நடப்பது என தெரியவில்லை. அது ஒரு கார்ப்பரேட் கட்சி. அவர்கள் குடும்பத்திற்கான கட்சி. மக்கள் கட்சி அ.தி.மு.க. தான்.

  இவ்வாறு அவர் பேசினார்.


  Next Story
  ×