என் மலர்
செய்திகள்

மெட்ரோ ரெயில்
ஓடும் மெட்ரோ ரெயிலில் பொம்மலாட்டம்- அதிகாரிகள் தகவல்
ஓடும் மெட்ரோ ரெயிலில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கான பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி நடந்தது.
சென்னை:
சென்னை, வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து டி.எம்.எஸ். வழியாக விமானநிலையம் மெட்ரோ ரெயில் நிலையம் செல்லும் ரெயில்களிலும், விமான நிலையம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் செல்லும் மெட்ரோ ரெயில்களிலும் நேற்று காலை பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி நடந்தது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. பயணத்தின் போது நடந்த இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சியை பயணிகள் ரசித்து சென்றனர்.
மேற்கண்ட தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Next Story