search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,184-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை நேற்று பவுனுக்கு மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. சில நாட்களாகவே விலையில் ஏற்ற-இறக்கம் காணப்பட்டு வந்த நிலையில் நேற்று பவுன் ரூ.38 ஆயிரத்து 48-க்கு விற்றது.

    இந்த நிலையில் இன்று 3-வது நாளாக தங்கம் விலையில் உயர்வு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 184-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ரூ. 4,773 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.66 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 66.40-க்கு விற்கிறது.

    Next Story
    ×