என் மலர்
செய்திகள்

மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பெண் பலி
மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:
சித்தூர் மாவட்டம் ரொம்பிச்சேர்லா மண்டலம் செஞ்சம்ரெட்டிக்காரிபள்ளி கிராம பஞ்சாயத்து ஸ்ரீராமுலவட்டிப்பள்ளியை சேர்ந்தவர் சுப்பராயலு. இவரின் மனைவி குமாரி (வயது 42). நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பெய்த மழையால், மின்கம்பி ஒன்று அறுந்து தொங்கியது. குமாரி நேற்று அதிகாலை தூங்கி எழுந்து வெளியே வந்தார். அவரின் கழுத்தில் அறுந்து தொங்கிய மின்கம்பி உரசியது. அதில் தூக்கி வீசப்பட்ட குமாரி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். ரொம்பிச்சேர்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story