என் மலர்
செய்திகள்

ராமகோபாலன்
ராமகோபாலனுக்கு திருச்சியில் மணிமண்டபம் கட்டப்படும்- காடேஸ்வரா சுப்பிரமணியம்
இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலனுக்கு திருச்சியில் மணிமண்டபம் கட்டப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
பொங்கலூர்:
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் பொங்கலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்து முன்னணியின் நிறுவன தலைவர் ராமகோபாலன் கண்ட கனவை நிறைவேற்ற இந்து முன்னணி என்றும் பாடுபடும். கடந்த 40 ஆண்டு காலத்தில் மிகப்பெரிய ஒரு வளர்ச்சியை இந்து முன்னணி பெற்றுள்ளது. அவர் காலத்தில்தான் பொள்ளாச்சியில் அமைய இருந்த மாட்டிறைச்சி தொழிற்சாலையை போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தினார்.
திருச்சியில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பெரிய அளவிலான ஒரு மணிமண்டபம் விரைவில் கட்ட ஏற்பாடு செய்யப்படும். அதற்கான வேலைகள் தொடங்கப் பட்டுள்ளது. கோவில் நிலங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. அதனை சட்ட ரீதியாக எதிர்த்து போராடவும் தயாராக உள்ளது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? என்பது யாருக்கும் தெரியாது. அவரும் குழம்பி, மக்களையும் குழப்புகிறார். அவர் அரசியலுக்கு வந்தால் பிறகு பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story