என் மலர்
செய்திகள்

தங்கம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,736-க்கு விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலை இன்று 2-வது நாளாக உயர்வை சந்தித்தது. நேற்று பவுனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 480-க்கு விற்றது.
இந்தநிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 736-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,842 ஆக இருக்கிறது.
கடந்த 1-ந்தேதி முதலே தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு விலை தொடர்ந்து குறைந்ததால் தங்கம் பவுனுக்கு ரூ.38 ஆயிரத்துக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து விலை ரூ.38 ஆயிரத்துக்கும் மேலே இருந்து வருகிறது.
இன்று தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளி விலையில் சிறிது குறைவு காணப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.64 ஆயிரத்து 300-க்கு விற்கிறது.

Next Story