என் மலர்

    செய்திகள்

    தற்கொலை முயற்சி
    X
    தற்கொலை முயற்சி

    ராணிப்பேட்டையில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தற்கொலை முயற்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராணிப்பேட்டையில் இன்று நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ராணிப்பேட்டை:

    நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. தேர்வை எழுதுவதற்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவனும், நேற்று மதுரையைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் ராணிப்பேட்டையில் இன்று நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சௌமியா என்ற மாணவி தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். சிகிச்சைக்குப்பின் மாணவி உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×