search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருஞ்சாணி அணை
    X
    பெருஞ்சாணி அணை

    குமரியில் தொடர் மழை- அணைகளில் நீர்மட்டம் உயர்கிறது

    குமரியில் தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்கிறது. அதிகபட்சமாக நேற்று தக்கலையில் 59 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பலத்த மழையாகவும், சாரல் மழையாகவும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று காலையில் நாகர்கோவில் நகரின் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. இடை இடையே வெயில் முகமும் காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடித்தது.

    நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

    பேச்சிப்பாறை- 16.4, பெருஞ்சாணி- 16.6, சிற்றார் 1- 18.2, சிற்றார் 2- 18.2, மாம்பழத்துறையாறு- 35, புத்தன் அணை- 15.2, முக்கடல்- 4.6, பூதப்பாண்டி- 5, களியல்- 1.3, கன்னிமார்- 2.8, கொட்டாரம்- 32, குழித்துறை- 33, மயிலாடி-18.2, நாகர்கோவில்- 32.8, சுருளக்கோடு- 17.2, தக்கலை- 59, குளச்சல்- 14, இரணியல்- 44, பாலமோர்- 18.2, ஆரல்வாய்மொழி- 3.6, கோழிப்போர்விளை- 58, அடையாமடை- 36, குருந்தங்கோடு- 50, முள்ளங்கினாவிளை- 52, ஆனைக்கிடங்கு- 32.4 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக தக்கலை பகுதியில் 59 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.

    இந்த மழையின் காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் தொடர்ந்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து கொண்டிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 723 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 426 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு 665 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு 70 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு 110 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 9 கன அடி தண்ணீரும், முக்கடல் அணைக்கு ஒரு கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 30.30 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 62.30 அடியாகவும், சிற்றார்-1, சிற்றார்-2 அணைகளின் நீர்மட்டம் தலா 10.20 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 52.41 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 10.20 அடியாகவும், முக்கடல் அணையின் நீர்மட்டம் 15.2 அடியாகவும் உள்ளன. மழையால் கல்குளம் தாலுகா பகுதியில் ஒரு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.
    Next Story
    ×