என் மலர்
செய்திகள்

ஆலங்குளம் அருகே 3 டன் ரேசன் அரிசி கடத்திய 6 பேர் கைது
நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள உகந்தான்பட்டி விலக்கு பகுதியில் சீதபற்பநல்லூர் போலீசார் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த 2 கார்கள், ஒரு லோடு ஆட்டோ ஆகியவற்றை நிறுத்தினர். பின்னர் அந்த வாகனங்களில் இருந்த 6 பேரிடம் விசாரித்தனர்.
அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் வாகனங்களை சோதனை செய்தபோது அதில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதனால் 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 6 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் பள்ளக்கால் புதுக்குடியை சேர்ந்த மூக்காண்டி (வயது 48), பாவூர்சத்திரத்தை சேர்ந்த செல்வம் (30), பேட்டையை சேர்ந்த செய்யது அலி (42), காசிம்மைதீன் (40), அப்துல் ரகீம் (27), ஜின்னா (28) என்பதும், அவர்கள் பேட்டை பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசியை கடத்தி கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ரேசன் அரிசி கடத்திய 6 பேரையும் கைது செய்து நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.